தலைமன்னாரில் ஐவர் கைது
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐவரும் தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 5 நபர்கள் கடற்படையினரால் விசாரணைக்கு உற்படுத்திய பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு,தலைமன்னார்,வவுனியா,கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரியவந்துள்ளது.

வாக்களிப்பு எண்ணிக்கையில் சாதனை புரிந்த இந்தியா : உத்தியோகபூர்வ முடிவுகள் இன்னும் 20 மணித்தியாலங்களில்
குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
5 சந்தேகநபர்களும் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு, விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri