இலங்கையின் தேசிய கடன் தரவரிசை அளவுகோலை மாற்றும் Fitch நிறுவனம்
சர்வதேச கடன் தரநிர்ணய நிறுவனமான Fitch Ratings, இலங்கையின் தேசிய கடன் தரவரிசை அளவுகோலை (National Rating Scale) மறுசீரமைப்பதாக அறிவித்துள்ளது.
2026, செப்டெம்பர் 22, அன்று, Fitch நிறுவனம், இலங்கையின் நீண்டகால உள்நாட்டு நாணயக் கடன் தரவரிசையை 'CCC+' என்பதில் இருந்து 'B-' ஆக உயர்த்தி, பொருளாதாரக் கண்ணோட்டத்தை, 'உறுதியானது' (Stable) என அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதி அபாயங்கள்
இந்த மறுசீரமைப்பு காரணமாக, இலங்கையில் தேசிய தரவரிசையைக் கொண்டுள்ள சில நிறுவனங்களின் கடன் தரவரிசைகளில் திருத்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என Fitch தெரிவித்துள்ளது உள்ளூர் முதலீட்டாளர்கள் வெவ்வேறு நிறுவனங்களின் நிதி அபாயங்களை எளிதில் வேறுபடுத்தி அறியவே தேசிய கடன் தரவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இலங்கையின் தேசிய தரவரிசைகள் ‘(lka)’ என்ற பிரத்யேக அடையாளக் குறியீட்டுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றைச் சர்வதேச தரவரிசைகளுடனோ அல்லது பிற நாடுகளின் தேசிய தரவரிசைகளுடனோ நேரடியாக ஒப்பிட முடியாது.