செம்மணி அவலம் தொற்றுநோயால் நடந்ததா.. எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

Gajendrakumar Ponnambalam Government Of Sri Lanka chemmani mass graves jaffna
By Rakesh Oct 23, 2026 06:49 AM GMT
Report

செம்மணி விவகாரத்தில் உள்ளக விசாரணைகள் உண்மைகளை ஒருபோதும் வெளிப்படுத்தாது. அரசு நேர்மையாகச் செயற்பட விரும்புகின்றது என்றால், சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இணங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும், "யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவா தனது அறிக்கையின் 17ஆவது பக்கத்தில், சுகாதார விபத்து காரணமாகக் கணிசமான நபர்கள் உயிரிழந்து புதைக்கப்பட்டுள்ளமையுடன் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழி ஒத்துப்போவதாகவும், அதனை நிராகரிப்பதற்கு எவ்விதமான காரணமும் இல்லை என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.

 இறுதி முடிவுகள்..  

அதே பந்தியில், இதுவரை கண்டறியப்பட்டுள்ள உடல்கள் தொடர்பில் நிபுணத்துவ குறைபாடுகள் காரணமாக இன்னும் எத்தனையோ விடயங்கள் செய்ய வேண்டியுள்ள காரணத்தால் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இறுதி முடிவுகளை அறிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுவிட்டு, சுகாதார விபத்தில் நடந்ததை போன்ற கருத்தையும் பதிவு செய்கின்றார்.

செம்மணி அவலம் தொற்றுநோயால் நடந்ததா.. எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு | Chemmani Report Rajsomadeva Gajendrakumar Mp

பேராசிரியர் ராஜ் சோமதேவா எந்த அடிப்படையில் தனது அறிக்கையில் இந்தக் கருத்துக்களைக் குறிப்பிட்டார்? 17 பக்கங்களை உள்ளடக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிட்ட விபத்து தொடர்பிலும் விபட்டை உறுதிப்படுத்தும் வகையிலும் ஆதாரங்கள் எதனையும் சமர்ப்பிக்காமல், முடிவுக்கு வர முடியாது என்று கூறிக்கொண்டு, குறிப்பிட்ட விடயத்தை அழுத்திக் கூறும் வகையில் குறிப்பிட்டுள்ளார் என்றால், அவரின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.

இதேவேளை, அவர் இதற்கு முன்னர் மூன்று அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அவர் தனது தனிப்பட்ட முடிவுகளை அவற்றில் குறிப்பிட்டுள்ளார். முதலாவது அறிக்கையில் பாரிய புதைகுழி என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இதற்கு முன்னர் செம்மணி தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் தமிழ்த் தேசியவாதத்தை எதிர்த்த தரப்புகளும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ராஜன் ஹுல் என்பவர் 1999ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையொன்றில், செம்மணியில் உடல்கள் ஆடைகள் இன்றிப் புதைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டு முகாம்களில் இருந்து கொண்டுசென்று செம்மணியில் புதைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், செம்மணி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஷிரந்தியின் இதய அறுவை சிகிச்சை தொடர்பில் வெளியான தகவல்

ஷிரந்தியின் இதய அறுவை சிகிச்சை தொடர்பில் வெளியான தகவல்

விசாரணைகள்..  

இந்நிலையில், தமிழ்த் தேசியப் பேரவையின் நிலைப்பாடானது, தொல்லியல் நிபுணர் ராஜ் சோமதேவா என்பவர் ஒரு நிகழ்ச்சி நிரலுடன் இயங்குகின்றார் என்பதாகும். இதனை நாங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளோம்.

செம்மணி அவலம் தொற்றுநோயால் நடந்ததா.. எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு | Chemmani Report Rajsomadeva Gajendrakumar Mp

அவருடைய கடந்தகாலச் செயற்பாடுகள் தொடர்பிலும் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளோம். கோட்டாபய ராஜபக்சவினால் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் தொடர்பான குழு அமைக்கப்பட்டபோது, பேராசிரியர் ராஜ் சோமதேவாவையும் அதில் இணைத்திருந்தார். அவரொரு சிங்கள, பௌத்த தேசியவாதியாவார்.

அவர் ஒரு நிகழ்ச்சி நிரலில்தான் இயங்குகின்றார் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை இந்த நாட்டுக்குள் நடத்த முடியாது என்பதனைத் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வருகின்றோம். இந்த அரசு நேர்மையாகச் செயற்பட விரும்புகின்றது என்றால், சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இணங்க வேண்டும். இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் தனித்துச் செய்யவில்லை.

இதனால், சர்வதேச விசாரணைக்கு இணங்காமல் உண்மையைக்கண்டறிய முடியாது. இப்போதாவது அரசு கண்களைத் திறக்க வேண்டும். செம்மணியில் கிட்டத்தட்ட 600 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 600 உடல்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாரதூரமான குற்றம் நடந்துள்ள சம்பவத்தில் அரசு அக்கறை செலுத்த வேண்டும்.

அரசிடம் இனவாதம் இல்லை என நிரூபிப்பதென்றால், முன்னைய ஆட்சியாளர்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்பதனை நிரூபிப்பதாக இருந்தால், தயவுசெய்து இந்த விடயத்திலாவது சர்வதேச குற்றவியல் விசாரணையைத் தடுக்காமல் இதற்கு இணங்க வேண்டும்." என்றார்.

சண்டித்தனம் செய்யும் சாதுக்கள் - புத்தரின் போதனை இதுதானா..! கடுமையாக சாடிய ஸ்ரீநேசன்

சண்டித்தனம் செய்யும் சாதுக்கள் - புத்தரின் போதனை இதுதானா..! கடுமையாக சாடிய ஸ்ரீநேசன்

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US