பயணக்கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் மீன் வியாபாரிகள் கைது!
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில், குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரிகள் 6 பேர், யாழ்ப்பாணம் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் நடமாடும் வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற வகையில் மக்களை ஒன்றுதிரட்டி மீன் வியாபாரம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இன்று (13) பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
அத்துடன் இவர்கள் வியாபாரத்துக்கென வைத்திருந்த மீன்கள் மற்றும் அது சம்பந்தமான வியாபாரப் பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நல்லூர் பிரதேச சபையால் ஏற்கனவே மக்கள் ஒன்றுகூடும் வகையில் வியாபாரம் செய்ய
வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாகக் குறித்த பகுதியில்
வியாபாரம் மேற்கொண்டமையினாலேயே இன்று குறித்த மீன் வியாபாரிகள்
கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
