மன்னார் கடலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு கடற்றொழிலாளர்கள் படுகாயம்
மன்னார் (Mannar) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவத்தில் கடற்றொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (21) மதியம் இடம்பெற்றுள்ளது.
கடலில் மிதந்து வந்ததாக கூறப்படும் பொதியை கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இருவர் சோதனையிட்ட போது குறித்த பொதி வெடித்ததில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இதனை தொடர்ந்து, படுகாயமடைந்தவர்கள், மன்னார் - பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த 37 வயதான எஸ்.ரமேஷ் என்பவரும் ஏ. ஆரோக்கியநாதன் என்பவரும் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அவர்கள் மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடலில் மிதந்து வந்த பொதியை எடுத்து தாம் சோதனை செய்த போது குறித்த பொதி வெடித்துள்ளதாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் வாக்கு மூலம் வழங்கி உள்ளனர்.
அதேவேளை, மன்னார் பிரதேசத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற கடற்றொழிலாளர்கள் சிலர் தடை செய்யப்பட்ட டைனமைட் வெடி பொருளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் குறித்த கடற்றொழிலாளர்கள் இருவரும் டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.



ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam