சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய கடற்றொழிலாளர்கள் பிணையில் விடுதலை
கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய கடற்றொழிலாளர்கள் பிணையில் செல்வதற்கு அனுமதியளித்துள்ளதாக தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இன்று (08.12.2022) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளையில், நீதிமன்றம் இவர்களை பிணையில் செல்வதற்கு அனுமதியளித்துள்ளனர்.
பிணையில் விடுதலை
கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருக்கின்ற சட்டவிரோதமான கடல் அட்டைப் பண்ணைகளுக்கு எதிராக, ஜனநாயக வழியில் போராடிக் கொண்டிருக்கும் அப்பாவி கடற்றொழிலாளர்கள் குடும்பங்களுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கானது இன்றையதினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டது. இந்த கடற்றொழிலாளர்கள் சார்பில் நான் முன்னிலையாகியிருந்தேன்.
இன்றையதினம் நாங்கள் நீதிமன்றத்திலே பொலிஸாருடைய வழக்கை எதிர்த்து குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவையின் 81ஆம் பிரிவின் கீழ் பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது.
இதில் அப்பாவி கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரமும் ஜீவனோபாயமும் பாதிக்கப்பட்டிருக்கின்றபடியால் சட்டவிரோதமாக எந்தவிதமான அனுமதியும் பெறாது அமைக்கப்பட்டிருக்கின்ற கடலட்டை பண்ணைகள் அகற்றப்பட வேண்டும்.

ஜனநாயக வழியில் போராடுகின்றார்கள் என்றும், ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை 81வது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் கொண்டுவர முடியாது என சுட்டிக்காட்டி வாதாடியிருந்தோம்.
அந்த அடிப்படையில் இன்றையதினம் சந்தேகநபர்களாக முற்படுத்தப்பட்ட கடற்றொழிலாளர்களை
பிணையில் விடுவித்த நீதிமன்றம் அடுத்த தவணை கடலட்டை பண்ணையாளர்களை
நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கட்டளையிடப்பட்டிருந்தது என்று தெரிவித்துள்ளார்.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan