கொழும்பு ஆயர் இல்லத்தை முற்றுகையிட்ட கடற்றொழிலாளர்கள்
நீர்கொழும்பு - பிட்டிப்பன பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதரகத்துக்கு முன்னாள் குறித்த ஆர்ப்பட்ட முன்னெடுக்கப்பட்ட நிலையில் தங்களது பிரச்சினை தொடர்பிலான கடிதம் ஒன்றை வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதரகத்து வழங்க தீர்மானித்திருந்தனர்.
எனினும் தங்களது கோரிக்கைக்கான எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்று தங்களது ஆர்ப்பாட்டத்தை பொரளை ஆயர் இல்லத்திற்கு முன்பாக மேற்கொண்டிருந்தனர்.
மேலும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுக்கப்படுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
கத்தோலிக்க திருச்சபையால் 65 ஆண்டுகளுக்கு முன்னர் பிட்டிப்பன கடற்றொழிலாளர்களுக்கு குறித்த நிலப்பகுதி குத்தகைமூலம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிலவிநியோகம் தொடர்பிலான விதிமுறைகளை கடற்றொழிலாளர்கள் மீறியதன் காரணமாக கத்தோலிக்க திருச்சபையானது வழங்கப்பட்ட நிலத்தை மீள பெற்றுத்தருமாறு தருமாறு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபையால் மேற்கொள்ளப்பட்ட வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நிலப்பகுதிக்கு மொட்டுக்கட்சியின் ஆதரவாளர் ஒருவர் தலைமையக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அரசியல் சூழ்ச்சிகள் வெளிப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri