கடற்றொழிலாளர்களின் ஓய்வூதியம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் ஜீலை மாதத்திலிருந்து கடற்றொழிலாளர்களின் பங்களிப்புக்கு ஏற்ப ஓய்வூதியத்தையும் அதிகரிக்கவுள்ளோம் என கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்கள்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்கள் மீன் பிடித்துறைக்கு முன்னுரிமை அளிக்கின்ற மாவட்டங்கள் மன்னார் மாவட்டம் நூற்றுக்கு நாற்பது வீதம் மீன் பிடி தொழிலையே பிரதானமாகக்கொண்டுள்ளனர்.
கடந்த காலத்தில் கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை கடற்றொழிலாளர்களை பகடைக்காய்களாக மாத்திரமே பயன்படுத்தினர்.
நிரந்தர ஓய்வூதியம் கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை சட்டவிரோத கடற்தொழிலை தடுத்தல் அதில் ஈடுபடும் மீனவர்களை தெளிவூட்ட வேண்டும் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையையும் இதன் ஊடாக தெளிவு படுத்த வேண்டியுள்ளது.
இந்தியாவுக்கும் எடுத்து சொல்ல வேண்டியுள்ளது.
மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தையும் அதிகரிக்க பெண்கள் அமைப்புக்களுக்கு ஊக்குவிக்கவுள்ளோம்.
இசைப்பிரியாக்கள்,
கூட்டுறவு சங்கங்களையும் பலப்படுத்தவுள்ளோம் யாழ்ப்பாணம் வரும் மனித உரிமை ஆணையாளரை வரவேற்கின்றோம்.
உலகில் எங்கையாவது மனித உரிமை மீறப்பட்டிருந்தால் அது தடுக்கப்படவேண்டும். மனித உரிமை மீறலில் ஈடுபபடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் உலகத்தில் இன்று மனித உரிமையை மீறுகின்றவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் நாங்கள் சொல்லுகின்றோம் மக்களுக்கு யுத்தம் முடிந்து 17வருடங்கள் ஆகின்றது.
நாங்கள் சொல்கின்றோம் இனியும் இப்படியான யுத்தம் ஏற்படக்கூடாது. இனிமேலும் இசைப்பிரியாக்கள், கிருசாந்திகள், கோணேஸ்வரிகள் உருவாகக்கூடாது.
செம்மணியில் புதையுண்டவர்களுக்கு நீதி
மனித உரிமை மீறல்கள் என்பது வடக்கில் மாத்திரம் இல்லை தமிழ் இளைஞர்களுக்கு மாத்திரம் அல்ல ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்களும் இதே விதத்தில் அடித்து நொருக்கி ஆறுகளில் பிணங்கள் மிதந்த வரலாறு உள்ளது.
இந்த விடயத்தை மீள மீள பேசி எங்களுடைய உறவை பிரிக்கின்ற நடவடிக்கையா எங்களுக்கு தேவை. ஆனால் நாங்கள் சொல்கின்றோம் செம்மணியில் புதையுண்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் உருவாகாத சமூதாயத்தை. உருவாக்க வேண்டும் அதனையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா



