இறங்கு துறைகள் இன்மையால் கடற்றொழிலாளர்கள் பெரும் சிரமம்
கிளிநொச்சி மாவட்டத்தின் கிராஞ்சி, இரணை மாதா நகர், பள்ளிக்குடா ஆகிய கரையோர பகுதிகளுக்கான இறங்குதுறைகளை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் வழங்கப்பட்ட போதும் இதுவரை அதற்கான வேலைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லையெனக் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தின் கரையோர கிராமங்களாகக் காணப்படுகின்ற கிராஞ்சி, பள்ளிக்குடா, இரணைமாதா நகர், செட்டியார் குறிச்சி போன்ற பகுதிகளில் இறங்கு துறைகள் இன்மையால் கடற்றொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஏற்கனவே சேதமடைந்த நிலையில் குறித்த இறங்கு துறைகள் காணப்பட்டதுடன் அண்மையில் வீசிய புரவி புயல் காரணமாகவும் சேதமடைந்து காணப்படுவதனால் கடற்தொழிலாளர்கள் தமது கடற்றொழில் உபகரணங்களைக் கடல் தொழிலுக்குக் கொண்டு செல்வதிலும் தொழிலுக்குச் சென்று திரும்பும் போதும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கிராஞ்சி, இரணை, மாதா நகர், பள்ளிக்குடா ஆகிய கரையோர பகுதிகளுக்கான இறங்குதுறைகளை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் கடந்த 2020 ஆண்டு வழங்கப்பட்ட போதும் இதுவரை அதற்கான வேலைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
இவையாவும் உடனடியாக செய்ய வேண்டிய
வேலைகளாக காணப்படுகின்றன என கடற்றொழில் நீரியல்
வளத்துறைத் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.





கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam
