காத்தான்குடி கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட படகு
கரையிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகு ஒன்றை காத்தான்குடி கடற்றொழிலாளர்கள் நேற்று(20) கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினரின் உதவியுடன் குறித்த படகு கரைக்கு கடற்றொழிலாளர்களினால் இழுத்து வரப்பட்டுள்ளது.
கோட்டாபய கிடப்பில் போட்ட சுரேஷ் சலேவுக்கு எதிரான முறைப்பாடுகள் : ஐந்து வருடங்களின் பின்னர் விசாரணைக்கு
பொலிஸார் மேலதிக விசாரணை
இந்திய நாட்டின் கொல்கத்தா விளையாட்டு கழகம் என குறித்த படகில் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலத்தில் இவ்வாறான ஒரு படகு குறித்த கடற்பிரதேசத்தில் இவ்வாறு தத்தளித்தது இதுவே முதல்தடவை என கடற்றொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
படகை செலுத்துபவர் யாருமின்றி இயந்திரமும் இன்றி குறித்த படகு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 18 அடி நீளம் உள்ள குறித்த படகு தற்போது இராணுவம், கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri