தொப்புள் கொடி என கூறி எங்கள் வளங்களை அழிக்கிறார்கள் : வி. அருள்நாதன்
தொப்புள் கொடி என கூறி எங்கள் வளங்களை இந்திய கடற்றொழிலாளர்கள் அழிக்கிறார்கள் என முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன உபதலைவர் வி. அருள்நாதன் (V. Arul Nadhan) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
"கடந்த 25ஆம் திகதி அன்று எமது கடற்பரப்பில் இந்திய இழுவை படகுகள் உள் நுளைந்தன. இதனை தடுப்பதற்காக கடற்படை படகு சென்ற போது இக்கட்டான நிலை ஏற்பட்டு கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்திய இழுவை படகுகள்
இதற்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் மக்கள் சார்பிலும் சங்கங்கள் சார்பிலும் அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம். உண்மையில் எங்கள் வாழ்வாதாரத்தினை பாதுகாக்க இந்திய இழுவை படகினை தடுப்பதற்காக சென்ற வேளை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்திய இழுவை படகுகள் அத்துமீறி எமது வளத்தினை அழிக்க வருகின்றார்கள் பலதடவைகள் கதைத்தும் நடக்கவில்லை கரைக்குடி நாகப்பட்டின பிரதேசங்களில் இருந்து வருகின்றார்கள்.
தமிழ்நாட்டு கடல் வளத்தினை அழித்துவிட்டு அதிகமான படகுகளை எங்கள் கடல் வளங்களுக்கு அனுப்புகின்றார்கள்.
கடற்படை அதிகாரி
மேலும், தொப்புள் கொடி என்று சொல்லி எங்கள் வளங்களை அழிக்கின்றார்கள். கச்சதீவில் வந்து கதைத்தோம் உடன் நிறுத்துவதாக இந்திய தூதுவர் சொன்னார்.
மனு கொடுத்தோம், கொழும்பில் சென்று கதைத்தோம், எதுவும் நடக்கவில்லை. இப்படியான இழப்புக்கள் வராமல் ஒரு கடற்படை அதிகாரியை இழந்ததை கவலையாக தெரிவிக்கின்றோம்.
அது மாத்திரமன்றி, இலங்கை ஜனாதிபதியிடமும் கடற்படை அமைச்சரிடமும் இந்திய இழுவைபடகு பிரச்சினைக்கு உடன் ஒரு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |