யுத்த வெற்றி தொடர்பில் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள தகவல்
யுத்தம் முடிவடைந்த இந்த தினத்தை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஏற்பாடு செய்த இராணுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பில் திங்கட்கிழமை (18) நடைபெற்றுள்ளது.
இந்நிழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பிளவுபடாத ஒரே நாடு
நாட்டை பாதுகாத்த இராணுவத்தினர் கௌரவிக்கப்பட வேண்டும். யுத்த வெற்றி நாளை ஒருபோதும் மறக்கக்கூடாது. இன்று இலங்கை பிளவுபடாத ஒரே நாடாக உள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும்.

அரசாங்கம் எப்படியோ என்று தெரியாது. ஆனால் மக்கள் நல்லிணக்கமாக உள்ளார்கள். அரசியல் பற்றி பேச விரும்பவில்லை.
யுத்த வெற்றிக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் என்றும் நினைவுகூரப்படவேண்டும். அவர்களால் தான் இன்று நாடு ஐக்கியமாக உள்ளமை பாரிய வெற்றியாகவுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam