ஆழியவளை கடற்கரையில் கடற்தொழிலாளர்கள் இடையே முறுகல்
யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் கடற்தொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (04.04.2025) காலை இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளில் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் புரிவது குறித்த சங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இன்று காலை நபரொருவர் உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிந்த போது அங்கு கடற்தொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக நீரியல்வளத் திணைக்கள அதிகாரியிடம் எமது பிரதேச செய்தியாளர் வினவிய போது, குறித்த கரைவலை சம்மாட்டிக்கு உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவரை உடன் அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
மேலதிக தகவல் - கஜி











அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

வெறும் 10 வருடங்களில் முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 42 வயது நபர் News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
