யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்! தீவிர முயற்சியில் உயிருடன் மீட்பு
யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த கடற்றொழிலாளர் நேற்று ( 7) இரவு வழமை போல் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளார். எனினும், நீண்ட நேரமாகியும் அவர் கரை திரும்பாததால் குடும்பத்தினரிடையே அச்சமும், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலையும் ஏற்பட்டது.
உயிருடன் மீட்பு
இதனைத் தொடர்ந்து, செம்பியன்பற்று வடக்கு சென். பிலிப் நேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தினர் உடனடியாக களத்தில் இறங்கி தேடுதல் பணிகளை ஆரம்பித்தனர்.தேடுதல் முயற்சிக்கு கடற்படையினரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

பல மணித்தியாலங்கள் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதலின் பயனாக, கரை பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த கடற்றொழிலாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டார்.
அன்றாட வாழ்க்கையை நகர்த்தவும், குடும்பப் பொருளாதாரத்தைக் கொண்டு செலுத்தவும் வேறு வழியின்றி, ஆபத்தான சூழலிலும் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.