மொனராகலை மாவட்டத்தில் 250 ஏக்கர் காணிகளை தம்வசமாக்க தொழிலதிபர்கள் திட்டம்
மொனராகலை மாவட்டத்தின் முக்கிய யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள 250 ஏக்கர் காணிகளை தொழிலதிபர்கள் தம்வசமாக்கிக் கொள்ளும் திட்டமொன்றுக்கு ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அனுராதபுர மாவட்டத்தில் யானைகள் நடமாட்டம் கூடிய 5 வனாந்தரங்களையும், 3 யானை வழித்தடங்களையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பதற்கான திட்டங்களைச் சுற்றுச்சூழல் அமைச்சு தயாரித்துள்ளது.
இதற்கிடையில், தெமளிய-வந்தம-குடாஓய யானைகளின் வாழ்விடத்தையும் வழித்தடத்தையும் அழிப்பதற்கான ஒரு திட்டத்தை மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சததுரி கங்கானியும், வெல்லவாய பிரதேச சபைத் தலைவர் வலிமுனிகே நிஹாலும் தயாரித்துள்ளனர்.
சதுரி கங்கானி மற்றும் வலிமுனிகே நிஹால் ஆகியோரின் அழுத்தம் மற்றும் செல்வாக்கின் பேரில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வெல்லவாய யானைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரியான நிஷாந்த பிரேமலால் இத்திட்டத்தைத் தயாரித்துள்ளார்.
எம்பிக்கள் உடந்தையா..
இத்திட்டத்தின் மூலம், மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மகாகடவர ஏரியைச் சுற்றியுள்ள 250 ஏக்கர் காடுகளைப் பல தொழிலதிபர்களுக்குப் பகிர்ந்தளிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் வெல்லவாய பிரதேச சபைத் தலைவரும் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகாகடவர ஏரிக்கரையோரமாக உள்ள வன நிலங்களைக் கைப்பற்றுவதற்கான ஒரு திட்டம், பல அரசாங்க வனாந்தர ஆக்கிரமிப்பாளர்களின் வேண்டுகோளின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மொனராகல மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவருமான ஜகத் புஷ்பகுமாராவால், தயாரிக்கப்பட்டது.
இருப்பினும், மனித-யானை மோதலைக் கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்துவதாகவும், மக்களுடன் ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் செயல்படுவதாகவும், முந்தைய அரசாங்கங்களைப் போல சட்டவிரோத செயல்களில் ஈடுபட மாட்டோம் என்றும் மக்களுக்கு வாக்குறுதியளித்த ஒரு அரசாங்கம், இவ்வாறான ஒரு திட்டத்தை முன்னெடுப்பது குறித்து பிரதேசவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தெமளிய-வந்தம-குடாஓய யானைகள் சரணாலயம் மற்றும் யானைகள் வழித்தடத்தின் சிறப்பு என்னவென்றால், இது லுனுகம்வெஹர தேசியப் பூங்காவிலிருந்து ஹந்தபானாகலவௌ இற்கு யானைகள் இடம்பெயரும் ஒரு பாரம்பரிய யானைகள் வழித்தடமாகவும், யானைகளின் நிரந்தர வாழ்விடமாகவும் இருக்கிற்து.
120 யானைகள்
2694 ஹெக்டயார் பரப்பளவில் அமைந்துள்ள தெமளிய-வந்தம-குடாஓய பாதுகாக்கப்பட்டுள்ள வனம் மற்றும் அதை ஒட்டியுள்ள கடவரவெவ, பரலுவெவ, தெமளியவெவ, ஹுரத்கமுவவெவ மற்றும் குணேரிஸ்வெவ உள்ளிட்ட வனப்பகுதிகளில் சுமார் 120 யானைகள் வசித்து வருகின்றன.

மேலும், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுமார் 350 யானைகள் இந்த வனப்பகுதி வழியாக இடம்பெயர்கின்றன. இந்த யானைகளின் இடம்பெயர்வுப் பாதை முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு, இப்பகுதியைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட யானைகள் ஒரு சிறிய வனப்பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், மகாகடவர ஏரிப் பகுதியிலிருந்து யானைகள் வழித்தடத்தைக் கடந்து, குடாஓயாவிலிருந்து தெமோதர மற்றும் ஹந்தபானகல வரை ஒரு புதிய யானை இடம்பெயர்வுப் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, மகாகடவர ஏரிக்குக் கீழே யானைப் பாதையிலிருந்து அகற்றப்படவுள்ள சுமார் 250 ஏக்கர் முழு வனப்பகுதியும் வணிகர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதன் காரணமாக பாரம்பரிய யானைகள் வழித்தடம் மற்றும்பரலுவெவ, தெமளியவெவ மற்றும் மகாகடவரவெவ ஆகிய குளங்கள் யானைகளால் இழக்கப்படும்.
அத்துடன் இந்த அழிவுகரமான திட்டத்தின் காரணமாக, புத்தள பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 12 கிராமங்களும், வெல்லவாய மற்றும் தனமல்வில பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 7 கிராமங்களும் கடுமையான யானை-மனித மோதலுக்கு உள்ளாகும்.
ஆளுங்கட்சி அரசியல்வாதிகளி இந்த நில அபகரிப்புத் திட்டத்தின் காரணமாக, 19 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் நிம்மதயான வாழ்க்கையை இழக்க நேரிடும் என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri