மட்டக்களப்பில் ஐஸ் பாவனையாளர்களால் தாக்கப்பட்ட கடற்றொழிலாளர்
மட்டக்களப்பு - சுவிஸ் கிராமம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களால் கடற்றொழிலாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கடற்றொழிலாளர், கடலுக்குச் சென்று வீடு திரும்பிய வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் பாவனையாளரின் அட்டகாசம்
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மட்டக்களப்பு - கொழும்பு பிரதான தொடருந்து கடவையில் கிடந்த பாதிக்கப்பட்ட நபரை அப்பகுதி வழியாக சென்ற சிலர் மீட்டுள்ளளனர்.

இது போன்று, சுவிஸ் கிராமப் பகுதியில் பல குற்றச்செயல்கள் அடிக்கடி நடந்து வந்தாலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஜனாதிபதி போதைப்பொருளை ஒழிப்பதற்கு எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் கிராமங்களில் நடக்கும் சில அட்டகாசங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கவும் என்றும் பாதிக்கப்பட்டவரின் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.