காத்தான்குடி கடலில் மீன்பிடிக்க சென்ற கடற்தொழிலாளர் மாயம்
காத்தான்குடி கடலில் தோணியில் மீன்பிடிக்க சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இன்று (03.10.2022) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்ப்பலா பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய மீராசாயிப் முபாரக் என்ற கடற்தொழிலாளரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடற்தொழிலாளர் மாயமான சம்பவம்
சம்பவதினமான நேற்று இரவு தனது தோணியில் பாலமுனை கடற்கரையில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றவர் இன்று திங்கட்கிழமை காலைவரை கரைக்கு திரும்பவில்லை.
இதனையடுத்து அவரை கடலில் தேடியபோதும் அவரை கண்டுபிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவரை கடற்படையினரின் உதவியுடன் தேடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் தற்போது காலநிலை மாற்றத்தால் கடும் காற்று வீசிவருவதால் காலி
தொடக்கம் அம்பாறை வரையும் கடற்தொழிலாளர்கள் செல்லவேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தல்
வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
