கிளிநொச்சியில் கடற்தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி இலவங்குடா கடற்பரப்பில் பாரம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அட்டை பண்ணைகளை அகற்றுமாறு கோரி கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
நான்காவது நாளாக இன்றும்(03.10.2022) இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட கிராஞ்சி இலவங்குடா கடற்பகுதியில் பாரம்பரிய தொழில் முயற்சிகளை கடற்தொழிலாளர்கள் மேற்கொள்கின்றனர்.
அட்டை பண்ணை
குறித்த தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில் அட்டை பண்ணைகளை அமைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள
கிளிநொச்சி கிராஞ்சி சிவபுரம் கிராமத்தில் உள்ள கடற்தொழிலாளர்கள் தமது உரிமை கோரி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.