மூளாய் பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர்
தொடர்ச்சியாக பெய்த அடை மழையால் வாழ்விடங்கள் பாதிப்படைந்த நிலையில் மூளாய்ப்பகுதி (ஜே/171) மக்கள் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அவர்களது நிலைமை குறித்து கலந்துரையாடினர்.
அதன் பின்னர் கடற்றொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நேற்றையதினம் காக்கைதீவு மற்றும் மூளாய்ப் பகுதிகளுக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினோம்.
உரிய திட்டங்கள்
அவர்கள் மிகவும் பாதிப்படைந்திருதிப்பதை நாங்கள் அவதானித்தோம். உண்மையில் இந்த நிலைமைகளுக்கு தீர்வு தேடிக் கொடுக்க வேண்டியவர்கள் அரசாங்கமும், அரசியல்வாதிகளும், அரசு நிறுவனங்களும் தான்.

இது ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக உள்ளது. எனவே, எதிர்வரும் காலங்களில் இந்த நிலைமையில் இருந்து உங்களை மீட்பதற்கு நாங்கள் சகல வேலை திட்டங்களையும் முன்னெடுப்போம். அதற்கான செயல்பாடுகளை நாங்கள் அண்மையிலேயே ஆரம்பித்து இருக்கின்றோம்.
இதன் போது குறித்த பகுதி மக்களின் கருத்துகளையும் நாங்கள் உள்வாங்கி செயல்படுவோம். இன்னும் சில நாட்களில் கடும் மழை பெய்யலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் அந்த நிலைமையையும் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன்" என்றார்.


 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        