மன்னாரில் 9 கடற்றொழிலாளர்கள் கைது (PHOTOS)
மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கடற்படையினரின் துணையுடன் கடற்பரப்பில் கள ஆய்வில் ஈடுபட்ட வேளையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் வியாழக்கிழமை (13) அதிகாலை மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கடற்படையினரின் உதவியுடன் கடற்பரப்பில் திடீரென கள நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் மன்னார் உப்புக்குளம்,பள்ளிமுனையைச் சேர்ந்த தலா மூன்று கடற்றொழிலாளர்கள் கொண்ட மூன்று படகுகளில் 9 கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |