மருதங்கேணி ஏரியில் இறந்து கிடக்கும் நன்னீர் மீன்கள் – கடற்றொழிலாளர்களுக்கு பேரதிர்ச்சி
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி கடல் நீர் ஏரிப் பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழந்து நீரில் மிதப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், குறித்த பகுதியில் நன்னீர் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
வடமராட்சி கிழக்கு பகுதியில் நன்னீர் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தற்போது மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக நன்னீர் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில், இதற்கான காரணம் தொடர்பில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, அதிக வெப்பநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் நன்னீர் மீனினங்கள் உயிரிழந்து நீரில் மிதக்கும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிரிலிய சவிய கணக்கு சர்ச்சை - ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லையாம்! மொட்டுக்கட்சி அம்பலப்படுத்திய உண்மை..



