இயற்கை எரிபொருளில் பறந்த முதல் விமானம்: பிரித்தானிய அரசு வெளியிட்ட தகவல்
100 சதவீதம் இயற்கை எரிபொருளை பயன்படுத்தி விமானம் ஒன்று வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம், அமெரிக்க விமான உற்பத்தியாளரான போயிங் நிறுவனம் மற்றும் பிரிட்டிஷ் ரோல்ஸ் ராய்ஸ் இயந்திர உற்பத்தியாளர்களுடன் இணைந்து 100 சதவீதம் இயற்கை எரிபொருளில் இயங்கும் விமானத்தை உருவாக்க விர்ஜின் அட்லாண்டிக் விமான தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதன் காரணமாக இறுதியில் புதுப்பிக்கத்தக்க உயிரி எரிபொருளான சமையல் எண்ணெய் மற்றும் விவசாய கழிவு பொருட்களில் இருந்து எடுக்கப்பட்ட முலப்பொருளுடன் மண்ணெண்ணெய் சேர்த்து உருவாக்கப்பட்ட முதல் இயற்கை எரிபொருளில் “போயிங் 787” என்ற விமானம் பறந்து சாதனை படைத்துள்ளது.
பசுமை எரிபொருளில் பறந்த முதல் விமானம்
நிலையான விமான எரிபொருளில்(sustainable aviation fuels) பறந்த இந்த விமானம, ஹீத்தோ விமான நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கி நியூயார்க் நகர விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
இதன் மூலம் பசுமை எரிபொருளில் பறந்த முதல் விமானம் என்ற சாதனையை விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் படைத்துள்ளது என பிரித்தானிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பசுமை எரிபொருளை பயன்படுத்துவதன் மூலம் 70 சதவீதம் கார்பன் வெளியேற்றத்தை தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த பயணத்தின் போது விமானத்தில் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |