காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு: மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்

Sri Lankan Tamils Sri Lanka Final War Maaveerar Naal
By Sheron Nov 29, 2023 08:41 PM GMT
Report

ஈழத்தமிழர்களின் முக்கியமான நாளொன்றான மாவீரர் நாளில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பேசியதாக கூறப்பட்ட காணொளி பலர் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த காணொளி மாவீரர் நாளான கடந்த (27.11.2023) ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதில் ஈழத்தமிழர்கள் மற்றும் இலங்கையின் அரசியல் கோட்பாடு தொடர்பில் பொதுவாக பேசப்பட்டது.

இந்த காணொளியில், தன்னை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என அறிமுகம் செய்துகொண்ட பெண் சுமார் 10 நிமிடங்கள் வரை உரையாற்றினார். அவர் பேசுகையில், "அரசியல் வழியில் தமிழீழத்திற்காக தொடர்ந்து பயணிப்போம். சிங்களத்திற்கு ஒருபோதும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

நாம் அனைவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். சவால்கள், ஆபத்துகளை தாண்டி நான் உங்கள் முன் தோன்றி இருக்கிறேன். தமிழீழம் உருவாகும் காலம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிங்கள அரசு தனித்து நின்று போர் புரிய திராணி அற்றது.

விடுதலை புலிகள் தலைவரின் மனைவியை சூழ்ந்து வந்த ஆபத்துக்கள்(Video)

விடுதலை புலிகள் தலைவரின் மனைவியை சூழ்ந்து வந்த ஆபத்துக்கள்(Video)

தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. பண்பாட்டு சீர்கேடுகள் அரங்கேறி வருகின்றன. ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தால் அரசியல் உரிமைகள் கிடைக்கும் என்றார்கள். ஆனால் அது கிடைக்கவில்லை. ஐநாவும் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை. 

தமிழீழத்துக்காக போராடி வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. இத்தனை ஆண்டுகளாக நம்மோடு துணை நிற்கும் அரசியல் தலைவர்கள், தாய் தமிழ் உறவுகளுக்கு நன்றி. நாம் சிங்கள மக்களுக்கும் எப்போதும் எதிரி இல்லை. அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் இல்லை. பாதைகள் மாறினாலும், நமது லட்சியம் மாறாது," என்று அவர் பேசியிருந்தார். 

பாதுகாப்பு அமைச்சின் நிலைப்பாடு

பெரும்பாலானவர்கள் இந்த காணொளியில் உள்ளது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா அல்ல என்றும் இது முற்றிலும் செயற்கை நுண்ணறிவை கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பேசியது துவாரகா தானா! சர்ச்சையை ஏற்படுத்தும் ஆடை: ஐயம் கொள்ளும் மூத்த ஊடகவியலாளர் (Video)

பேசியது துவாரகா தானா! சர்ச்சையை ஏற்படுத்தும் ஆடை: ஐயம் கொள்ளும் மூத்த ஊடகவியலாளர் (Video)


எவ்வாறு இருப்பினும் இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் குறிப்பிடுகையில், இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தேவை ஏற்படின் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு: மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம் | Maaveerar Thinam Thuvaraka Speech Controversy

இலாப நோக்கம்

இருப்பினும் காணொளி வெளியாகும் முன்னரே மாவீரர் தினத்தன்று விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பேசிய காணொளி வெளிவரும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும் இந்த செய்தி, சர்வதேச நாடுகளிலிருந்து முற்றிலும் இலாபத்தை பெறும் நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரித்தானியாவில் மாவீரர் நாளில் தோன்றிய விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் மகன் (Video)

பிரித்தானியாவில் மாவீரர் நாளில் தோன்றிய விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் மகன் (Video)


அந்த செய்தியின்படியே குறித்த மாவீரர் தினத்தில் துவாரகா பேசிய காணொளி வெளிவந்தது.

இந்த காணொளியில் பேசியது துவாராக இல்லை என்பதற்கு பல உதாரணங்களும் சான்றுகளும் முன்வைக்கப்படுகின்றன.

காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு: மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம் | Maaveerar Thinam Thuvaraka Speech Controversy

மொழி நடை

அதில் முதலாவது காணொளியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி நடை.

காணொளியில் ஈழத்தமிழ் தென்பட்டாலும் சில இடங்களில் ஈழத்தமிழுக்கு அப்பாட்பட்ட சொற்களும் உபயோகிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக மாநிலம் என்ற வார்த்தை அந்த காணொளியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி இலங்கையில் மக்கள் மாநிலம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது என்பது மிகவும் அரிதான ஒன்று.

அவ்வாறு இருக்கையில் மாநிலம் என்ற வார்த்தையை அதுவும் தமிழீழத்தின் முக்கிய அங்கம் வகித்த ஒருவர் எவ்வாறு இப்படி பேச முடியும் என நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அடுத்த பிரதான காரணமாக கூறப்படுவது முக பாவனை.

பேசும் போது வாய் அசைவிற்கும் உச்சரிப்புக்கும் இடையில் வேறுபாடு தோன்றுகின்றது.

ஒரு சாதாரண தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளமையால் இவ்வாறான குறைபாடுகள் காணப்படுவதாக தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பக்கம் இந்த செயற்பாட்டுக்கு பின்னால் இந்தியா இருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. மேலும், இந்த காணொளி வெளியானதற்கு பின்புலத்தில் இலங்கை அல்லது இந்தியாவின் புலனாய்வுத்துறைகள் இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

எவ்வாறு இருப்பினும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் முயற்சியாகவே இது பலராலும் பார்க்கப்படுகிறது.    

காணொளியில் காட்டப்படும் பெண் நிச்சயமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகளாக இருக்க முடியாது, அவருடைய உடை, மொழி என்பன வித்தியாசப்பட்டுள்ளதுடன், இதன் பின்னணியில் இந்தியா செயற்படுகின்றது என்று மூத்த ஊடகவியலாளர் நிக்சன் தெரிவித்தார்.

இதேவேளை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என்று இலங்கையில் உரையாற்றிய பெண், அவரது மகளே இல்லை என இந்தியாவை சேர்ந்த கார்ட்டூனிஸ்டு பாலா தெரிவித்துள்ளார். 

அவர் குறிப்பிடுகையில், "ஒருவேளை தலைவர் மேதகுவின் மகள்தான் இவர் எனில் அதைவிட மகிழ்ச்சி வேறு இல்லை. ஆனால், முகங்களின் ஒவ்வொரு பகுதியையும் கூர்ந்து ஆய்வு செய்யும் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக ஓவியனாக சொல்கிறேன். 200 சதவீதம் இரண்டு முகமும் ஒன்றல்ல." என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறு இருப்பினும் துவாரகாவின் வருகை தொடர்பில் சர்வதேச ஊடகங்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Gallery
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நவாலி வடக்கு

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US