இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை நீடிக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்து
இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த நீடிப்பை அமெரிக்கா ஆதரிக்கிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே கடந்த மாதம், 7ம் திகதியில் இருந்து போர் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அமெரிக்காவின் தலையீடு
இதற்கமைய, அமெரிக்காவின் தலையீடு மற்றும் கட்டார், எகிப்து மத்தியஸ்தத்தின் விளைவாக இந்தப் போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக, அமெரிக்கா வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கருத்து தெரிவிக்கையில்,
“பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க விரும்புகிறோம். எனவே போர் இடைநிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா ஆதரிக்கிறது.
நான் கூறியது போல், பிராந்தியத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்த உள்ளோம்.
ஹமாஸிற்கு எதிராகத் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கி வருவது இஸ்ரேலுக்குத் தெரியும்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |