முதல்முறையாக டிசம்பரில் நத்தார் பண்டிகையை கொண்டாடிய உக்ரைன் மக்கள்
உக்ரைன் மக்கள் ஜனவரி 7ஆம் திகதி நத்தார் பண்டிகையை கொண்டாடிவந்த நிலையில், இந்த வருடம் டிசம்பர் 25ஆம் திகதி முதல்முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூலியன் நாட்காட்டி மற்றும் ரஷ்ய அரசின் பாரம்பரிய முறைப்படி ரஷ்ய கண்டத்திலுள்ள உக்ரைனும் ஆண்டுதோறும் ஜனவரி 7ஆம் திகதி நத்தார் பண்டிகையை கொண்டாடி வந்தது.
போரின் எதிரொலி
இந்நிலையில், உக்ரைன் - ரஷியா இடையிலான போரின் எதிரொலியாக உக்ரைனுக்கு புதிய விதிமுறைகளை அந்நாட்டு ஜனாதிபதி வெலாதிமீர் ஸெலென்ஸ்கி கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ரஷ்ய பாரம்பரிய முறையைத் தவிர்த்து கிரிகோரியன் நாட்காட்டியின் படி டிசம்பர் 25ஆம் திகதி நத்தார் பண்டிகையை உக்ரைன் மக்கள் கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான தகவலை ஜனாதிபதி ஸெலென்ஸ்கி நேற்று (24) அறிவித்திருந்தார். அதில் நாட்டு மக்களுக்கு அவர் குறிப்பிட்டிருந்ததாவது ''அனைத்து உக்ரைன் மக்களும் ஒன்றிணைந்து நத்தார் பண்டிகையை கொண்டாட வேண்டும். ஒரே நாளில், ஒரு பெரிய குடும்பமாக, ஒரே நாடாக நாம் ஒன்றிணைய வேண்டும்'' எனக் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |