ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் ஈழத் தமிழர்
ஒலிம்பிக் (Olympic) தீபத்தை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை பிரான்ஸின் (France) வெதுப்பக உரிமையாளர் (Baker) தர்ஷன் செல்வராஜா (Tharshan Selvarajah) பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் தீபம் தர்ஷன் செல்வராஜாவிடம் நேற்று (15.07.2024) மாலை 6 மணிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் அதை ஏந்தி 2.5 கிலோமீட்டர்கள் ஓடியுள்ளார்.
இவர், பாரிஸ் நகரில் கடந்த வருடம் பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்றவர் ஆவார்.
சிறந்த பாண் உற்பத்தியாளர்
அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்கு பாண் விநியோகம் செய்யும் உரிமையையும் இவர் பெற்றுள்ளார்.
🇫🇷🇱🇰🥖🔥 Tharshan Selvarajah, porteur n° 132 de la flamme olympique de @Paris2024 dans le XXè arrondissement, en tant que lauréat du Prix de la meilleure baguette 2023 de @Paris : ceinturée par les mouflets que je raccompagnais à leurs géniteurs, on assista tous les trois au… pic.twitter.com/Vglis3SB5L
— Celia à Paris / Celia at Paris (@CeliaAtParis) July 15, 2024
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன், சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான விருதை பாரிஸில் கடந்த வருடம் பெற்றுக்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |