இன்னும் சொற்ப நேரத்தில் நிகழவுள்ள இவ்வாண்டின் முதல் சூரிய கிரகணம்
2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்றைய தினம் நிகழவுள்ளது.
இந்திய நேரப்படி, இந்த சூரிய கிரகணமானது இன்று பிற்பகல் 2:20 மணிக்கு தொடங்கி மாலை 6:13 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது தற்காலிகமாக சூரியன் மறைக்கப்படும் நிகழ்வே சூரிய கிரகணமாக தென்படுகிறது.
கிரகணம் தெரியும் பகுதிகள்
இது ஒருசில நகரங்களில் முழுமையாகவும், ஒரு சில நாடுகளில் பகுதியாகவும் தெரிகிறது. ஆனால், இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என கூறப்படுகிறது.
எனினும் இதனை ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆசியாவின் வடக்கு பகுதிகள், வடக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், தென் அமெரிக்காவின் வடக்கு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அவதானிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாண்டிற்கான இரண்டாவது சூரியகிரகணம் செப்டெம்பர் 21 ஆம் திகதி தென்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |