ரமழான் தொழுகையின்போது பூமிக்குள் புதைந்த 700 இஸ்லாமியர்கள்! மியான்மரில் தொடரும் சோகம்
ரமழான் தொழுகையில் இருந்த 700 இஸ்லாமியர்கள் நிலநடுக்கத்தால் பூமிக்குள் புதைந்து உயிரிழந்த செய்தி மியான்மரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரண்டு முறை ஏற்பட்ட நிலஅதிர்வில், முதல் நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.7 ஆகவும், இரண்டாவது அதிர்வு ரிக்டர் அளவில் 6.4 ஆகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் மையம்
மியான்மரின் சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில், மதியம் 12:50 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.
அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் (யூஎஸ்ஜிஎஸ்) சார்பில், "மியான்மர் நிலநடுக்கம் மிகவும் மோசமானது. இந்த நிலநடுக்கம் மோசமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம். பலி எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்தை கடக்கலாம்" என்று அச்சம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பலி எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மீட்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
