போர்க்குற்றங்களை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளும் சரத் பொன்சேகா
மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால், இராணுவத்தினருக்கு எதிராக சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தடை விதிக்கப்பட்ட இரண்டு பேர் தொடர்பில் தானும் நாடாளுமன்றத்தில் விமர்சித்ததாக பொன்சேகா கூறியுள்ளார்.
வசந்த கரன்னாகொட மற்றும் ஜகத் ஜெயசூரியா ஆகியோர் போர்க்களத்தில் முன்பக்கத்தில் அல்ல, பின்புறத்தில் போரிட்டவர்கள் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம்
போர்க்களத்தின் பின்புற பகுதிகளில் ஏதேனும் தவறு நடந்திருந்தால், அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் ஜகத் ஜெயசூர்யா இராணுவத் தளபதியாக பணியாற்றிய போது அவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க்களத்தில் முன்னணியில் நின்று போராடிய சவேந்திர சில்வா எந்தத் தவறும் செய்யவில்லை எனவும் போர் வீரர்களை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்படவில்லை எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam