விடுதலைப்புலிகளின் தலைவருக்கு வியப்பை ஏற்படுத்திய திருநாவுக்கரசின் தகவல்
சிறையில் இருக்கக்கூடிய தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளிப்படுத்திய விடயம் முரணாகவும் தமிழ் மக்களை பொறுத்தமட்டில் வருத்தமளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
தற்போது சிறையில் உள்ள அரசியல் கைதிகள் அனைவரும் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறியப்பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என்றும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தேர்தல் காலங்களில் தேசிய மக்கள் சக்தியாக இருக்கக்கூடிய மக்கள் விடுதலை முன்னணியினர் அரசியல் கைதிகள் தொடர்பாக உரிய முறைமை கையாளப்படும் என பிரசாரங்களில் உரக்கக் கூறியிருந்தனர்.ஆனால் இன்று எதுவும் நடக்கவில்லை.
முன்னதாக 1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினுடைய உறுப்பினர்கள் ஜே.ஆர்.ஜெயவர்தனவினுடைய காலப்பகுதியில் விடுதலை செய்யப்பட்டார்கள். இதில் ரோஹண விஜயவீரரும் ஒருவர் ஆவார்.
இது இவ்வாறிருக்க பிமல் ரத்நாயக்க தற்போது கூறிய விடயம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
இந்நிலையில் அக்காலப் பகுதியில் ரோஹண விஜயவீர தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்ட அரசறிவியல் துறை ஆசானான மு.திருநாவுக்கரசை சந்திக்க திட்டமிட்ட நிலையில் அரசறிவியல் ஆசான் ஒரு கருத்தை முன்வைக்கின்றார்.
அதாவது சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் இந்த சந்திப்பு நிகழும் என்று குறிப்பிட்டிருந்தார்.ஆனால் அவ்வாறான சந்திப்புக்கள எதுவும் அதன்பின் நிகழவில்லை.
இந்த சம்பவத்தை அதன்பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மு.திருநாவுக்கரசு கூறிய போது, எந்த சூழ்நிலையிலும் நாங்கள் எதனையும் இழந்து விட கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

இந்திய - இலங்கை இராணுவ ஒப்பந்தம்: 220 இலட்சம் இலங்கையர்கள் பலியாகக்கூடிய அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
