பெரும் பொருளாதார நெருக்கடியில் பிரித்தானியா.. ட்ரம்பின் வரியால் ஏற்படவுள்ள சிக்கல்
அமெரிக்கா, நாளை விதிக்கவுள்ள வரிகளால் பிரித்தானியா (UK) பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கும் ஒப்பந்தம் சரியான நேரத்தில் எட்டப்படாது என்றும் குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கார் மற்றும் கார் பாகங்கள் மீது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 25 வீத வரிக்கு மேல், ஏப்ரல் 2 ஆம் திகதி புதிய வரிகளை அல்லது இறக்குமதி வரிகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
பொருளாதார ஒப்பந்தம்
இந்த வரிகள் அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடுகளை மாத்திரமல்ல, அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இரு நாடுகளுக்கும் இடையே வரிகளைத் தவிர்ப்பதற்காக ஒரு பொருளாதார ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவை என்று பிரித்தானிய பிரதமரின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஆனால் அவை பிரித்தானியா மீது விதிக்கப்பட்டால் பழிவாங்கும் வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் டிமாண்டி காலனி 3.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் Cineulagam
