தாய்வான் எல்லை பகுதிகளில் திடீர் பரபரப்பு
தாய்வானின் எல்லைப் பகுதியின் பல இடங்களில் சீன இராணுவப் படை பயிற்சிகளை ஆரம்பித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக தாய்வானை சுற்றி வளைத்து இராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக சீனா அறிவித்துள்ளது.
அத்துடன், இது தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தேவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்றும் சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தாய்வானை, சீனாவுடன் இணைக்க வேண்டும் என்று சீன அரசாங்கம் முன்பிலிருந்தே வலியுறுத்தி வருகிறது.
தாய்வான் - சீன ஒன்றிணைவு
இருப்பினும், சீனாவின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து தாய்வான் தனி நாடு என்று அந்நாடு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில், சீனாவின் இராணுவ பயிற்சிக்கு தாய்வான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று தாய்வான் கூறியுள்ளது.
அதன் காரணமாக, சீன இராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தாய்வானும் தனது இராணுவத்தை தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தாய்வான் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படை விமானங்கள் எச்சரிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீன தகவல்கள் கூறுகின்றன.

செவ்வந்தி பதுங்கியிருப்பதாக ஹோட்டல் ஒன்றை பெரும் படையுடன் சுற்றிவளைத்த பொலிஸார் - காத்திருந்த அதிர்ச்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
