ஜனாதிபதி செயலகத்துக்குள் பிரவேசித்த முதல் ஆர்ப்பாட்டக்காரர் கைது!
ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்ததாக கூறப்படும் முதலாவது ஆர்ப்பாட்டக்காரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபர் நேற்று(01) விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலிமுகத்திடல் போராட்டம்

100 நாட்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களால் தடுக்கப்பட்ட வளாகம், ஜூலை 9 அன்று அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது.
பின்னர் கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில் ஜனாதிபதி மாளிகைக்குள்ளும் ஜனாதிபதி செயலகத்துக்குள்ளும் போராட்டக்கார்கள் பிரவேசித்தனர்.
இதன்போது செயலகத்துக்குள் முதலில் பிரவேசித்தவரையே பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri