வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம்!(Photo)

Sri Lankan Tamils Mannar Eastern Province Northern Province of Sri Lanka
By Ashik Aug 01, 2022 10:58 PM GMT
Report

'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் நூறு நாட்கள் நடைபெறவுள்ள செயல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று(1)காலை மன்னார் பிரதான சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நூறு நாட்கள் நடைபெறவுள்ள செயல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம்!(Photo) | Coordination Group 100 Day Mission Begins Mannar

குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ , மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ். திலீபன் மற்றும் கிராம மட்ட அமைப்புகள் ,விவசாய, மீனவ சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் , மாணவர் அமைப்புகள்,சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், மன்னார் மெசிடோ பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்த செயற்திட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களால் மனு ஒன்று வாசிக்கப்பட்டது.

அதிகார பரவலாக்கம்

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம்!(Photo) | Coordination Group 100 Day Mission Begins Mannar

இந்த மனுவில்,“நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசு கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்.வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்.

13 வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகார பரவலாக்கதுக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் சிறுபான்மை தமிழ் மக்களான நாம் ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகளின் இனவாதக் கொள்கைகளால் பல்வேறு வழிகளிலும் அடக்கப்பட்டு வந்துள்ளோம். அது இன்று வரை தொடர்கிறது. இதுவே தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகார பரவலாக்கம் குறித்து சிந்திக்கத் தூண்டியது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம்!(Photo) | Coordination Group 100 Day Mission Begins Mannar

இதன் நியாயத்தன்மையை பிராந்திய நட்பு நாடான இந்தியாவும் சர்வதேச நாடுகளும் என்றோ ஏற்றுக்கொண்டுள்ளன. அதன் விளைவே இந்தியா, இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான அதிகார பரவலாக்கம் சார்ந்து இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் (1987 இன் இந்திய - இலங்கை உடன்படிக்கை), 1999 – 2008 வரையான காலப்பகுதியில் நோர்வேயின் மத்தியத்துவம் மற்றும் 2002இல் இலங்கையில் சமாதானம், புனர்வாழ்வு மற்றும் மீளக் கட்டுமானம் சார்ந்து பங்களிப்பு செய்வதற்கு ஜப்பானின் அமைச்சரவை திரு.யசூசி அகாசி அவர்களை நியமித்தமை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.

அரசியல் தீர்வு

1987 இன் பின்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசுகள் எதுவுமே அதிகார பரவலாக்கத்தை நிராகரிக்கவில்லை. விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் அதிகார பரவலாக்க உரையாடலை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. 1987இல் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக அதிகார பரவலாக்கத்துக்கான 13வது திருத்தச்சட்டத்தை அரசியலமைப்பில் இணைத்தார்.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம்!(Photo) | Coordination Group 100 Day Mission Begins Mannar

1990இல் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அரசியல் தீர்வுகளுக்கான திட்டங்களை முன்வைத்தார். இவரின் காலத்தில், 1991இல், திரு. மங்கள முனசிங்க தலைமையில் 45 பேர் கொண்ட நாடாளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்பட்டு தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

1994 சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாயிருந்த காலத்தில், 1995இல் நீலன் திருச்செல்வம் மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் “ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு” அடங்கலான தீர்வுப் பொதி தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2001இல் ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கம் நோர்வே மத்தியத் துவத்துடன் சுயாட்சி (பெடரல் ) முறையில் அதிகார பரவலாக்கத்துக்கு இணங்கியது நினைவுகூறத்தக்கது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம்!(Photo) | Coordination Group 100 Day Mission Begins Mannar

2015இல் ஆட்சிக்கு வந்த விக்கிரமசிங்க சிறிசேன “நல்லாட்சி” அரசு, ஐ.நா. மனித உரிமைப் பேரவையால் ஏற்கப்பட்ட தீர்மானத்தின் இணைப்பங்காளியாக இருந்தது. இத்தீர்மானத்தின் செயற்பாட்டு உறுப்புரை 16 ஆனது, அரசியல் தீர்வை, அதிகார பரவலாக்கத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறது.

அவ்வகையில், வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு, அதிகார பரவலாக்கம் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் அங்கமாயிருப்பதுடன், சர்வதேச சமூகத்தினால், ஐக்கிய நாடுகள் சபையினாலும் வரவேற்கப்படுகின்ற ஒன்றாகும்.

எனவே, எமக்கான உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கத்திற்கும், நட்பு நாடான இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்தி கொண்டு வடக்கு கிழக்கு வாழ் மக்களான நாம், எமது சாத்வீகமான, ஜனநாயகமான நூறு நாட்கள் செயல்முனைவு ஆவணி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கிறோம். வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்”என குறிப்பிடப்பட்டுள்ளது. 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, மிருசுவில்

15 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், உடுவில், Redbridge, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
23ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, சங்குவேலி வடக்கு, யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

Klang, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, சிட்னி, Australia

11 May, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Thirunelvely, சொலோதென், Switzerland

14 May, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Swindon, United Kingdom

12 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Markham, Canada

13 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US