முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி : மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்த இலங்கை
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி டக்வேத் லூயிஸ் அடிப்படையில் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
கண்டி பல்லேகல்ல மைதானத்தில் நேற்று (20) நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 38.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றது.
இரண்டாவது ஒருநாள் போட்டி
இதில் செர்பான் ரத்போரட் 74 ஓட்டங்களை பெற்றார். இதன்போது மழை குறுக்கீடு காரணமாக, ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட்டு, இலங்கை அணிக்கு 37 ஓவர்களில் 232 ஓட்டங்கள் என்ற இலக்கு டக்வேத் லூயிஸ் முறையில் நிர்ணயிக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி, 31.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ஓட்டங்களை பெற்றது.
இதில், சரித் அசலங்க 77 ஓட்டங்களையும், நிசான் மதுஸ்க 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்
இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, ஒக்டோபர் 23ஆம் திகதியன்று பல்லேகல்ல மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
