ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் வண்ணப்படம் வெளியீடு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் படத்தை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க விண்வெளி மையமான நாசாவால் கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய திறன் வாய்ந்த 'ஜேம்ஸ் வெப்' விண்வெளி தொலைநோக்கியின் முதல் படத்தையே அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி
இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்த தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப்பணியை இந்த தொலைநோக்கி மேற்கொள்ளவுள்ளது.
முதல் வண்ணப்படம்
பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்தி கொண்ட இந்த தொலைநோக்கி நவீன மனித குலம் முன்பு அறிந்திடாத பல அரிய தகவல்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு நாளை வெளியிட உள்ளது.
அதற்கு முன்னோட்டமாக ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட
முதல் வண்ணப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்