முதலில் பொதுத்தேர்தல் : மொட்டு கட்சி எம்.பி. கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி தேர்தலும், பொதுத் தேர்தலும் குறுகிய கால இடைவெளிக்குள் நடப்பதற்கான சாத்தியம் உள்ளது என அரச பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.
எனினும், பசில் ராஜபக்ச முடிவுகளை எடுத்த பின்னர் முன்னோக்கி பயணிக்கவுள்ளதோடு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் என்பன இந்த வருடத்துக்குள் நடத்தப்படும். எனினும், இரு தேர்தல்களும் குறுகிய இடைவெளிக்குள் நடத்தப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




