பிரித்தானியாவில் கலவரங்களில் ஈடுபட்ட முதல் நபர் மீது குற்ற வழக்கு பதிவு
பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்ற கலவரங்களுடன் தொடர்புடைய முதல் நபர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, 32 வயதான கியரன் உஷர் (Kieran Usher) என்ற நபரே குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சண்டர்லாந்து நகரில் ஆகஸ்ட் 2ஆம் திகதி நடந்த கலவரத்தில் கியரன் உஷர் ஈடுபட்டதற்காக குற்றம் சட்டப்பட்டுள்ளதாக நார்தும்ப்ரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கான எச்சரிக்கை
கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த நபர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் இது கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கை அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இடம்பெற்ற கலவரங்கள், சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் நாடு முழுவதும் பரவிய நிலையில், அரசுத்துறை வழக்கறிஞர்கள், கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மேலும் கடுமையான தண்டனைகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை தடுக்கும் முயற்சியாக நீதித்துறையும் அரசாங்கமும் தங்களின் நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam