பிரித்தானியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்களுக்கு நடந்த விபரீதம்
பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐந்து சிறுவர்கள் உட்பட வயயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை(14) மதியம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 11, 13 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்களும் 7 வயதுடைய சிறுமி ஒருவர் மற்றும் 62 வயதுடைய பெண் ஒருவர் என 6 பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில், சம்பவத்தினை நேரில் பார்த்த ஒருவர், “ஒரு சிறுவனின் தலையிலும், ஒருவரின் முதுகிலும், ஒருவரின் கையிலும், கழுத்திலும் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் ஜன்னல் வழியாக சிறுவர்கள் மீது வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும்”அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த சிறுவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி குண்டுகள் நீக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் Air rifle துப்பாக்கி மூலமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர், 15 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் இருவர் உட்பட 18 வயதுடைய நபர் என ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என யார்க்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் தெற்கு யார்க்ஷயர் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 36 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
