இந்தியாவில் முதல் தடவையாக பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ள பௌத்தர்!
இந்தியாவில் முதல் தடவையாக, பௌத்த மதத்தை சேர்ந்த ஒருவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் புத்த பூர்ணிமாவுக்கு பின்னரான இரண்டு நாட்களில் தாம் பதவியேற்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்தியாவின் புதிய பிரதம நீதியரசர் பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
நீதியரசர் கவாயின் தந்தை 1956 ஆம் ஆண்டு லக்னோவில் நடந்த ஒரு நிகழ்வில் பௌத்தத்தை தழுவிக்கொண்டார்.
பதவிக்காலம்
அந்த காலத்தில், சுமார் அரை மில்லியன் தலித் மக்கள், சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சரும், இந்தியாவின் அரசியலமைப்பை வரைந்தவருமான இந்திய தேசியத் தலைவரான அம்பேத்கரின் தலைமையில் பௌத்தர்களாக மாறினர்.
இந்தநிலையில் கவாயின் முழுக் குடும்பமும் பௌத்தத்தை தழுவியது.
முன்னதாக மும்பாய் மேல் நீதிமன்றத்தில் 16 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் நீதிபதி கவாய் இந்திய உயர் நீதிமன்றத்திற்கு பதவி உயர்த்தப்பட்டார்.
இருப்பினும், அவரது பிரதம நீதியரசர் பதவிக்காலம் குறுகியதாக இருக்கும். இதன்படி அவர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஓய்வு பெறவுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
