அரச மருத்துவமனையொன்றில் செயற்கை கருத்தரித்தல் மூலம் பிறந்த முதலாவது குழந்தை
இலங்கையின் அரச மருத்துவமனையொன்றில் செயற்கை கருத்தரித்தல்(IVF) மூலம் கருவான முதலாவது குழந்தையின் பிறப்பு, அரச சுகாதாரப் பராமரிப்பில் இடம்பெற்றுள்ளது.
ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா மருத்துவமனையில் சிசேரியன் முறையில் நேற்று(31) இந்த பிரசவம் இடம்பெற்றுள்ளது.
களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் செயற்கை கருத்தரிப்பு மையத்தின் ஒரு வருட கால முயற்சியைத் தொடர்ந்து இநத வெற்றிகரமான பிறப்பு நிகழ்ந்துள்ளது.
செயற்கை கருத்தரிப்பு
குழந்தையை பிரசவித்த 31 வயதான தாயும் அவரது குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
செயற்கை கருத்தரிப்பு செயன்முறை முதன்முதலில் கடந்த ஆண்டு குறித்த பல்கலைக்கழகத்தின் கருவுறுதல் மையத்தில் நடத்தப்பட்டது. இந்த பிரசவம் பேராசிரியர் ரசிகா ஹேரத் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
