யாழ்.வடமராட்சி- கற்கோவளத்தில் சம்பு புல்லிற்கு தீ வைப்பு!
யாழ்.வடமராட்சி- கற்கோவளம் பகுதியில் கடலரிப்பைத் தடுக்கும் இயற்கையாக வளர்ந்திருந்த சம்பு புல்லில் தீடீர் தீ பற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று(5.6.2026) பிற்பகல் 7:00 மணியளவில் கற்கோவளம் கடற்கரை பகுதியில் கரையோரமாக வளர்ந்துள்ள சம்பு புல்தொடர் பகுதியில் தீ பரவியது.
தொடர்பாக பிரதேச மக்களால் வட்டார பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற அவர் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளருடன் தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவித்து தீயை அணைப்பதற்காக தண்ணீர் தாங்கிகளை அனுப்புமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
கோரிக்கை
இந்தநிலையில் உடனடியாகவே பிரதேச சபையின் செயலாளர் தண்ணீர் தாங்கியை அனுப்பியுள்ளார்.
மக்கள், பருத்தித்துறை பொலிஸாாரும் சேர்ந்து தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் கடற்படையினரும் தங்களுடைய நீர் தாங்கியை கொண்டு சென்று தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தீயை முழுமையான கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்துள்ளனர்.

எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்த நிலைமைகளை விரைவாகக் கட்டுப்படுத்துவதற்கு வடமராட்சி பிரதேசத்திற்கு நிரந்தர தீயணைப்பு வாகனம் ஒன்று அவசியமாக தேவைப்படுவதால் தீயணைப்பு வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன் கோரிக்கை விடுத்துள்ளார்.