கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் திடீரென பற்றியெறிந்த தொடர்மாடி குடியிருப்பு! : மக்கள் பதற்றம் (VIDEO)
புதிய இணைப்பு
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர்.
49 வயதுடைய பாத்திமா பர்ஷானா, 55 வயதுடைய அக்பர், 23 வயதுடைய அன்பாஷ் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தீ விபத்தின்போது பர்ஷானா என்பவர் தீ விபத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தொடர்மாடிக் குடியிருப்பின் பின்புறத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.
பின்னர் படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின்போது வீட்டில் பெட்ரோல் கேன் ஒன்றும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த இடத்தில் அதிகளவிலான மக்கள் ஒன்றுகூடியதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடிக் குடியிப்பு ஒன்றில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்துள்ளன.
இன்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை அணைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதன்போது உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan