கொழும்பில் திடீர் தீவிபத்தில் 80 வீடுகள் சேதம்! பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக இடங்களில் தங்க வைப்பு (Video)
கொழும்பு - பாலத்துறை பகுதியிலுள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் நேற்றைய தினம் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சுமார் 80 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குறித்த தீப்பரவல் முகத்துவாரம் - கஜிமாவத்தை பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடத்தொகுதியிலேயே இடம்பெற்றிருந்தது.
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட தீப்பரவல்
இதனை தொடர்ந்து பொலிஸார், இராணுவத்தினர், கொழும்பு மாநகரசபை தீயனைப்புப் படையினர் ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.

இதனை தொடர்ந்து தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக இடங்களில் தங்க வைப்பு
தீ விபத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் களனி நதி விஹாரை மற்றும் முவதர உயன அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை விபத்தானது போதைப்பொருள் பாவனையாளர்கள் பயன்படுத்திய மெழுகுவர்த்தியின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.






பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri