ஹொரணையில் பற்றி எரியும் முதியோர் இல்லம் ! 11 பேரைக் காணவில்லை..
புதிய இணைப்பு
ஹொரானா, படகொட, கல்பாத்தா பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று பிற்பகல் (3) ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 44 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மேலும் 11 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (03) பிற்பகல் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
55 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி
இந்தத் தீ விபத்தில் காயமடைந்த முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 55 பேர் கல்பாத மற்றும் ஹொரண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்களை இந்த காணொளியில் காண்க...
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri