காலி மீன்பிடித் துறைமுகத்தில் திடீர் தீ விபத்து
காலி மீன்பிடித் துறைமுகத்திலுள்ள படகு பராமரிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல படகுகள் முற்றிலுமாக எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று(08.11.2026) இடம்பெற்றுள்ளது.
பராமரிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பழைய படகு ஒன்றில் முதலில் தீப்பிடித்ததாகவும், பின்னர் அது துறைமுகத்திலிருந்த ஏனைய படகுகளுக்கும் பரவியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து
இலங்கை கடற்படை, காலி மாநகர தீயணைப்புப் படை, துறைமுகக் காவல்துறை மற்றும் மீனவ சமூகத்தினர் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது தீ ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறாக, தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.