காத்தான்குடியில் பிரபல தனியார் நிறுவனத்தில் தீப்பரவல்!
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தனியார் நிறுவனத்தில் தீப்பரவல் ஏற்பட்ட போது அதனை அவதானித்த அருகிலுள்ள வியாபார நிலையங்களின் ஊழியர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் படையினரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரைக்கும் கண்டறியப்படாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.



ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri