முல்லைத்தீவு - விசுவமடுவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து
முல்லைத்தீவு(Mullaitivu) - புதுகுடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட விசுவமடு வள்ளுவர் புரம் பகுதியில் அமைந்துள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலை ஒன்று தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த தீ விபத்தானது இன்று (09.07.2024) இடம்பெற்றுள்ளது.
வள்ளுவர்புரம் பகுதியில் பெண்களை கொண்ட சிறு கைத்தொழில் நிறுவனமாக இந்த கைத்தொழில் தும்புத் தொழிற்சாலை நிறுவனம் கடந்து 8 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது.
தீ விபத்து
அத்துடன், 12 பெண் தொழிலாளர்கள் இந்த தும்புத் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், தும்புகளை பிரித்து காயம் விடப்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்போது, தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதேச செயலகம் ஊடாக கிளிநொச்சியிலிருந்து தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு முற்று முழுதாக நீர் பாய்ச்சப்பட்டு தும்புளில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ பரவலினால் 12 லட்சம் பெறுமதியான தும்புகள் முற்று முழுதாக எரிந்துள்ளமையினால் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக குறித்த தும்பு தொழிற்சாலையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri
