யாழில் தீவிபத்து: முற்றாக கருகிய வீடு
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள வீடொன்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வசாவிளான் சுதந்திரபுரம் பகுதியில் வீடொன்று மின் கசிவினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (04.09.2023) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து
இச்சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண்ணுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று கிடைத்துள்ளது. இதனால் அயல் வீட்டில் இருந்து வயர் ஊடாக மின்சார இணைப்பினை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் நேற்று திடீர் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த அயலவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்த பொழுதும் வீடுமுற்றாக எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 18 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri