முல்லைத்தீவில் பற்றி எரிந்த வீடு: பெருமளவான பணம் தீயில் நாசம்(Video)
முல்லைத்தீவில் விசுவமடு மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் திடீரென குப்பி விளக்கு தீப்பற்றியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து (19.05.2023) ஆம் திகதி பதிவாகியுள்ளது.
விபத்தின் போது வீட்டின் ஒரு பகுதியும் வீட்டில் இருந்த ஆடைகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணம் என்பன தீயில் எரிந்துள்ளன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக விசுவமடு மேற்கு கிராம அலுவலகருக்கு தெரிவித்திருந்த போதிலும் கிராம சேவையாளர் வந்து பார்வையிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கவனயீனம்
இதேவேளை தீ விபத்து தொடர்பாக புது குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பாக எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட வீட்டார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது அமைப்புக்கள் மற்றும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
